வாய் பிளக்கும் அம்சம்.. இந்தியாவில் iQOO Neo 9 Pro ரிலீஸ் உறுதியானது.. என்ன விலை?


      
Published on: 5th January 2024 05:21 PM

வாய் பிளக்கும் அம்சம்.. இந்தியாவில் iQOO Neo 9 Pro ரிலீஸ் உறுதியானது.. என்ன விலை?

ஐக்யூ (iQOO) பிராண்டு விரைவில் இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் அதன் புதிய ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் அறிமுகத்திற்கு முன்பாக சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சீனா ஸ்மார்ட்போன் சந்தையில் ஐக்யூ நியோ 9 சீரிஸ் (iQOO Neo 9 Series) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட கையோடு அடுத்து விரைவில் இந்திய சந்தைக்குள் அறிமுகமாக தயாராகிவிட்டது. இந்திய அறிமுக தேதி இன்னும் வெளியிடப்படாத நிலையில், அமேசான் இந்திய (Amazon India) வலைப்பக்க தகவல் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வகையில் லெண்டிங் பேஜ் பக்கத்தை லைவ் செய்துள்ளது.

இப்போது வெளியான தகவலை வைத்து பார்க்கையில், ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro):ஆனால், சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஸ்மார்ட்போன் சாதனத்தின் நிறுவனம் மீடியாடெக் டைமென்சிட்டி 9300 சிப்செட்டை (MediaTek Dimensity 9300 chipset) பயன்படுத்தி இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்திய சந்தையில் ஐக்யூ நியோ 9 ப்ரோ போன் 4 நிறங்களில் அறிமுகமாகும்.

இதில் ஒரு வேரியண்ட் மாடல் வைட் மற்றும் ரெட் டூயல் டோன் வீகன் லெதர் (White and Red dual-tone vegan leather) மாடலுடனும் அறிமுகமாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கியமான அம்சங்களை பொறுத்த வரையில், 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் (12GB LPDDR5 RAM and 512GB UFS 4.0 storage) உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.78" இன்ச் 1.5K ரெசொலூஷன் உடன் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 144Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் இன்-ஸ்கிரீன் பிங்கர்பிரிண்ட் சென்சார் அம்சத்தை ஆதரிக்கும். இதில் 6K VC லிக்விட் கூலிங் 3D ஹீட் டிசிபேஷன் சிஸ்டம் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும். இதனால் போன் ஓவர் ஹீட்டிங் சிக்கலுக்கு ஆளாகாது.இது 5160mAh பேட்டரி உடன் 120W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இது 50W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும். இது 50MP (Sony IMX920 with OIS) + 8MP (ultra-wide) டூயல் கேமரா அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் FunTouch OS 14 உடன் வருகிறது. இது ஐஆர் பிளாஸ்டர் (IR blaster), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (dual stereo speaker) உடன் வருகிறது.

இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும் இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.40,000 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் தரமான கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் உடன் இந்த சாதனம் வெளிவருவதனால், இதன் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்