என்னாது, த்ரிஷாவுக்கும், சொந்தக்கார பையனுக்கும் கல்யாணமா?


      
Published on: 9th May 2024 04:30 PM

என்னாது, த்ரிஷாவுக்கும், சொந்தக்கார பையனுக்கும் கல்யாணமா?

த்ரிஷாவுக்கு 41 வயதாகிறது. ஆனால் அவரை பார்த்தால் 41 வயது போன்றே தெரியவில்லை. கெரியரில் உச்சத்தில் இருக்கிறார். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக இருக்கிறார்.
த்ரிஷாவுக்கு ஒரு கல்யாணம் நடந்தால் நல்லா இருக்குமே என்பது ரசிகர்களின் வருத்தம். இந்நிலையில் த்ரிஷாவுக்கும், உறவினர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என தகவல் வெளியாவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
 

முன்னதாக த்ரிஷாவுக்கும், மலையாள சினிமா தயாரிப்பாளர் ஒருவருக்கும் திருமணம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகவல் வெளியானது. அதை பார்த்த த்ரிஷாவோ, அமைதியாக இருங்கள், வதந்தி பரப்புவத்தை நிறுத்துங்கள் என கூலாக ட்வீட் போட்டு திருமண பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தான் த்ரிஷாவுக்கு திருமணம் என மீண்டும் பேசப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் த்ரிஷா. இந்த திருமண செய்தி அவர் கண்ணில் பட்டால் நிச்சயம் விளக்கம் அளிப்பார். எனக்கு திருமணம் என த்ரிஷா அறிவித்தால் மட்டுமே நம்பலாம்.



த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல் ஹாசனுக்கு அல்ல மாறாக அவரின் மகனாக நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. விண்ணைத் தாண்டி வருவாயா ஜோடி தக்லைஃபில் சேர்ந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தை எடுங்க, எடுங்கனு இந்த கவுதம் மேனனிடம் பல வருஷமா சொல்லியும் பலனில்லை. எது எப்படியோ சிம்பு, த்ரிஷா ஜோடி மீண்டும் சேர்ந்துவிட்டது, அது போதும் என்கிறார்கள் அவர்களின் ரசிகர்கள்.


இதற்கிடையே சில குசும்புக்கார ரசிகர்களோ த்ரிஷாவுக்கும், சிம்புவுக்கும் ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார்கள். சிம்புவுக்கும் கல்யாணம் ஆகவில்லை, த்ரிஷாவும் சிங்கிளாக இருக்கிறார். இரண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் சூப்பராக இருக்கிறது. பேசாமல் சிம்புவும், த்ரிஷாவும் திருமணம் செய்து கொண்டால் என்னவென்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.


தொடர்புடைய செய்திகள்