5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்பு.. அறுவை சிகிச்சையின்றி அகற்றி மருத்துவர்கள் சாதனை!


      
Published on: 4th May 2024 12:53 PM

5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்பு.. அறுவை சிகிச்சையின்றி அகற்றி மருத்துவர்கள் சாதனை!

சென்னை போரூர் பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒரு மாதத்திற்கு முன்பு எல்இடி பல்பை விழுங்கினான். நுரையீரலில் எல்இடி பல்பு சிக்கியதால் அச்சிருவனுக்கு மூச்சு திணறல் மற்றும் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று ப்ரோன்கோஸ்கோபி மூலம் எல்இடி பல்பை எடுக்க முயற்சித்து வருகின்றனர்.ஆனால், பல்பை அகற்ற முடியாததால், அனைத்து மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சை செய்து பல்பை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் சிறுவனின் பெற்றோர் அறுவை சிகிச்சை செய்யாமல் பல்வேறு மருத்துவமனைகளில் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு சிறுவனின் சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவரது நுரையீரலில் எல்இடி பல்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நுரையீரலில் சிக்கியுள்ள எல்இடி பல்பை ப்ரோன்கோஸ்கோபி மூலம் அகற்ற முயற்சிப்பதாகவும், முடியாவிட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

அதன்பிறகு, சிறுவனுக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை தொடங்கப்பட்டு, இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, நுரையீரலில் சிக்கிய எல்இடி பல்ப் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. எல்இடி பல்பை அறுவை சிகிச்சையின்றி ப்ரோன்கோஸ்கோபி மூலம் பாதுகாப்பாக அகற்றி மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது சிறுவன் நலமுடன் வீட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்இடி பல்பை விழுங்கி ஒரு மாதமாக உயிருக்குப் போராடிய சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின்றி ப்ரோன்கோஸ்கோபி மூலம் பல்பை அகற்றி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்